பாலியல் தொழில்: 3 பேர் கைது
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய முதியவர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் கவிதா, சப் இன்ஸ்பெக்டர் சந்துரு உள்ளிட்ட போலீசார், சோதனை மேற்கொண்டனர்.அப்போது, முத்துக்குமார் மனைவி வசந்தி, 45; ரங்கநாதன் மகன் ராமச்சந்திரன் ஆகியோர் வாடகைக்கு வீடு எடுத்து, நல்ல சம்பளத்துடன் வேலை வாங்கித் தருவதாக இரண்டு பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது தெரிந்தது.இது தொடர்பாக, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, வசந்தி, ராமச்சந்திரன், 65; சரண்ராஜ், 18; ஆகியோரை கைது செய்தனர். அங்கிருந்த இரண்டு இளம்பெண்களை மீட்டனர்.