மேலும் செய்திகள்
பொது இடத்தில் குப்பை ரூ.2.54 கோடி அபராதம் வசூல்
17-Dec-2024
கடலுார், ;கடலுார் முதுநகரில் பிளாஸ்டிக் பை வைத்திருந்த கடை உரிமையாளருக்கு, மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா உத்தரவின்பேரில் கடலுார் பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து, அபராதம் விதித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் முதுநகர் கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை செய்ததில் ஒரு கடையில் பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.கடை உரிமையாளர் அபராத தொகை செலுத்தினார். ஆனால், அதற்குறிய ரசீது வழங்கியதில் அபராத தொகை ரசீது புத்தகத்தில் முதல் பக்கத்தில் தெளிவாகவும், அடியில் உள்ள பக்கத்திதல் பதிவாகவில்லை என, வியாபாரிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகியதால் பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து மாநகராட்சி ஆணையர் அனு கூறும்போது, இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறேன். தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
17-Dec-2024