உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சுய உதவிக்குழுவினர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

சுய உதவிக்குழுவினர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

வடலூர்: நபார்டு சார்பில் சுய உதவிக்குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் வடலூரில் நடந்தது. நபார்டு மாவட்ட வளர்ச்சி மேலாளர் சசிகுமார் தலைமை தாங்கினார். முகாமில், 30 சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நபார்டின் சுய உதவிக்குழு மற்றும், கூட்டு பொறுப்பு குழு திட்டங்களின் நோக்கங்கள், கிராமப்புற மகளிர் முன்னேற்றத்தில் அவற்றின் பங்கு குறித்து மேலாளர் சசிகுமார் விளக்கினார். சுய உதவிக்குழுக்களின் வெற்றிகரமான செயல்பாட்டிற்கு அடிப்படையாக உள்ள, 'பஞ்ச சூத்திரங்கள்' குறித்தும் அவர் பேசினார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர் ராஜேஷ் குமார், மகளிர் திட்டம் மூலம் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கும் பல்வேறு ஆதரவு குறித்து விளக்கினார். கருணை அறக்கட்டளை வளர்மதி, சுய உதவிக்குழுக்களின் கணக்கு பராமரிப்பு மற்றும் பதிவேடுகளை முறையாக மேற்கொள்வதன் அவசியத்தை விளக்கி பயிற்சி அளித்தார். கடன் தகவல் அறிக்கை பற்றிய விழிப்புணர்வு, தொழில் நோக்கத்திற்கான கடன் பயன்பாடு மற்றும், அரசின் மானிய திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வு காணொளிகளை காட்சிப்படுத்தி விளக்கம் அளிக்கப்பட்டது. .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !