உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறிய பாலம் சேதம்: பொதுமக்கள் அவதி

சிறிய பாலம் சேதம்: பொதுமக்கள் அவதி

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சி 9வது வார்டு கந்தசாமி தெருவில் இருந்து 10வது வார்டு ரத்தினம் தெருவுக்கு செல்ல கந்தசாமி குறுக்கு தெரு உள்ளது. இவ்வழியாக தினமும் 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் மக்கள் செல்கின்றனர். கந்தசாமி குறுக்கு தெருவில் பழமையான சிறிய பாலம் பல மாதங்களாக உடைந்து சேதமான நிலையில் உள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோர் கீழே விழும் நிலை உள்ளது. இதை சரி செய்வதில் இரண்டு வார்டை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளும் ஈகோவால் கண்டு கொள்ளாமல் உள்ளனர். நகராட்சி அதிகாரிகள் இங்கு ஆய்வு செய்ததோடு சரி. அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், பொதுமக்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே, பாலத்தை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை