உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறுவள்ளி கிழங்கு விற்பனை ஜோர்

சிறுவள்ளி கிழங்கு விற்பனை ஜோர்

திருக்கனுார், : திருக்கனுார் பகுதியில் பயிரிட்டு அறுவடை செய்யப்பட்ட சிறுவள்ளி கிழங்குகளை தமிழக வியாபாரிகள் முகாமிட்டு வாங்கி சென்றனர்.தமிழர்களின் முக்கிய விழாவான பொங்கல் பண்டிகையின் 5ம் நாள் புதுச்சேரி, கடலுார், பண்ருட்டி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதியில் ஆற்றுத்திருவிழா, சுவாமி தீர்த்தவாரி நடந்து வருகிறது.இந்நிலையில், இன்று (18ம் தேதி) ஆற்றுத் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, திருக்கனுார் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பல ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பயிரிட்டு அறுவடை செய்த சிறுவள்ளி கிழங்குகளை, தமிழக வியாபாரிகள் நேற்று கே.ஆர்.பாளையம் சாலை சந்திப்பு பகுதியில் அதிக அளவில் முகாமிட்டு, விற்பனைக்கு வாங்கி சென்றனர்.அறுவடை செய்யப்பட்ட சிறுவள்ளிக் கிழங்குகள் கிலோ ரூ.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை