உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ராட்சத துாண் அமைக்கும் பணி பிரதான சாலையில் மண் சரிவு

ராட்சத துாண் அமைக்கும் பணி பிரதான சாலையில் மண் சரிவு

கடலுார் : கடலுாரில் புதிய மேம்பாலத்திற்கான ராட்சத துாண்கள் அமைக்கும் பணியால், பிரதான சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.கடலுார் கெடிலம் ஆற்றில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட, இரும்பு மேம்பாலம் இருந்தது. நுாறு ஆண்டுகள் பழமையான இப்பாலம் சேதமடைந்ததால், இதன் அருகில் புதியதாக மேம்பாலம் கட்டப்பட்டு, வாகன போக்குவரத்து சென்று வருகின்றது. இந்நிலையில், இரும்பு பாலத்தை இடித்து விட்டு, 22.15 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கியது. தற்போது ஜவான்பவன் சாலையோரத்தில் ராட்சத துாண்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிக்காக பள்ளம் தோண்டியதால், ஜவான்பவன் சாலையில் ஆற்றங்கரையோரத்தில் மண் சரிவால் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் வாகனங்கள் விபத்தில் சிக்காமல் தடுக்கும் வகையில் மணல் மூட்டைகள் அடுக்கி, பேரிகார்டு வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை