மேலும் செய்திகள்
மது போதை தகராறில் நண்பனை கொன்றவர் கைது
25-Jul-2025
பண்ருட்டி : பண்ருட்டியைச் சேர்ந்தவர் ராமலிங்கம்,75; இவரது மனைவி ராஜம்,69; இவர்களின் மகன் கண்ணன்,40; இவர், தனது தாயிடம் சொத்து கேட்டு அடிக்கடி தகராறு செய்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கண்ணன் மீண்டும் தனது தாயிடம் சொத்து கேட்டு தகராறு செய்து, கத்தியால் தலையில் வெட்டினார். இதில், பலத்த காயமடைந்த ராஜம், மேல் சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில், பண்ருட்டி இன்ஸ்பெக்டர் வேலுமணி, கொலை முயற்சி வழக்குப் பதிந்து கண்ணனை கைது செய்து, விசாரித்து வருகிறார்.
25-Jul-2025