உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தந்தை ஓட்டிச்சென்ற ஆட்டோ கவிழ்ந்து மகன் உயிரிழப்பு

தந்தை ஓட்டிச்சென்ற ஆட்டோ கவிழ்ந்து மகன் உயிரிழப்பு

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே தந்தை ஓட்டிச்சென்ற ஆட்டோ கவிழ்ந்ததில், பள்ளி சிறுவன் பரிதாபமாக இறந்தார். கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முருகவேல், 35; ஆட்டோ டிரைவர். இவரது மகன் ரோஹித், 4; விருத்தாசலத்தில் உள்ள தனியார் பள்ளியில் யு.கே.ஜி., படித்து வந்தார். நேற்று காலை வழக்கம்போல், முருகவேல், தனது மகன் ரோஹித்தை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்றுள்ளார். குப்பநத்தம் சாலையில் சென்றபோது. நாய் ஒன்று குறுக்கே ஓடியதால் பிரேக் போட்டுள்ளார். அப்போது ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குளானது. இதில், படுகாயமடைந்த ரோஹித் சம்பவ இடத்திலேயே இறந்தார். முருகவேல் காயங்களுடன் தப்பினார். விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ