மகன் மாயம்; தாய் புகார்
கிள்ளை; மகனை காணவில்லை என தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.கிள்ளை சிங்காரக்குப்பம் கோவில் தெருவை சேர்ந்தவர் அஜந்தா, 40; இவரது, மகன் சுமன்ராஜ், 22.சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் இன்ஜினியரிங் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். இவர், கடந்த 17ம் தேதி வீட்டில் இருந்து கல்லுாரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து அஜந்தா கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தாமோதரன் வழக்குப் பதிந்து, சுமன்ராஜை, தேடிவருகிறார்.