மேலும் செய்திகள்
இருதரப்பு மோதல் 5 பேர் மீது வழக்கு
06-Jul-2025
விருத்தாசலம் : சொத்து பிரித்து தராததால், தாயை ஏர் கன் துப்பாக்கியால் சுட்ட மகனை போலீசார் கைது செய்தனர். கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கம்மா புரம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் பத்மாவதி, 70. இவரது மகன் வீரபாண்டியன், 39. கடந்த 22ம் தேதி, பத்மாவதியிடம், சொத்து பிரித்து தரக்கோரி வீரபாண்டியன் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட பிரச்னையில் ஆத்திரம்அடைந்த வீரபாண்டியன், மறைத்து வைத்திருந்த ஏர் கன் துப்பாக்கியால், பத்மாவதியை சுட்டார். இதில், அவருக்கு தொடை மற்றும் தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டது. பின்னர், அருகில் இருந்த மெடிக்கல் ஷாப்பிற்கு வீரபாண்டியன் அழைத்துச் சென்று முதலுதவி செய்தார். தொடையில் காயம் அதிகமானதால், ஆப்பரேஷன் செய்யும் நிலை ஏற்பட்டது. இதனால், விருத்தாசலம் - பெண்ணாடம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பத்மாவதியை சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு அவருக்கு ஆப்பரேஷன் செய்யப்பட்டு, நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையறிந்த உளவுத்துறை போலீசார், உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இச்சம்வம் தொடர்பாக கம்மாபுரம் போலீசார் வழக்கு பதிந்து வீரபாண்டியனை பிடித்து விசாரணை நடத்தியதில், சொத்து தகராறில், தாயை ஏர் கன் துப்பாக்கியால் சுட்டதை ஒப்புக் கொண்டார். போலீசார் அவரை கைது செய்தனர்.
கடந்த 22ம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து, கம்மாபுரம் தனிப்பிரிவு காவலர், எஸ்.பி.,க்கு தகவல் தெரிவிக்காமல் இருந்துள்ளார். மேலும், இது சம்பந்தமாக கம்மாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் பேச்சு நடத்தி உள்ளனர். இதனால், எஸ்.ஐ., கொளஞ்சி, தனிப்பிரிவு காவலர் சரவணன் ஆகியோரை எஸ்.பி., ஜெயக்குமார் ஆயுதப் படைக்கு மாற்றம் செய்து நேற்று உத்தரவிட்டுள்ளார்.
06-Jul-2025