மேலும் செய்திகள்
எஸ்.ஐ., பற்றாக்குறையால் காவல் நிலையங்கள் திணறல்
15-Dec-2024
கடலுார்: கடலுாரில் நடந்த சட்டம், ஒழுங்கு தொடர்பான கூட்டத்தில், சப்இன்ஸ்பெக்டர்களுக்கு எஸ்.பி., ஆலோசனை வழங்கினார்.கடலுார் மாவட்டத்திலுள்ள நேரடி, பயிற்சிபெற்ற சப்இன்ஸ்பெக்டர்களுக்கான சட்டம், ஒழுங்கு கூட்டம் கடலுாரில் நடந்தது. இதில் மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் தலைமை தாங்கி பேசுகையில், புகார் மனுக்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். சட்டம், ஒழுங்கு பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் சமூகவிரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுரை வழங்கினார். ஏ.டி.எஸ்.பி., கோடீஸ்வரன், டி.எஸ்.பி., சவுமியா, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம், சப்இன்ஸ்பெக்டர்கள் முகமதுநிசார், ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
15-Dec-2024