உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாற்றுத்திறனாளிகளுக்கு புவனகிரியில் சிறப்பு முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கு புவனகிரியில் சிறப்பு முகாம்

புவனகிரி: புவனகிரி தாலுகா அலுவலகத்தில் கோட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடந்தது.சிதம்பரம் கோட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் புவனகிரி தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது. தாசில்தார் அன்பழகன் தலைமை தாங்கி மனுக்கள் பெற்றார். தலைமையிடத்து கூடுதல் தாசில்தார் பழனி, மண்டல துணை தாசில்தார் வேல்மணி, மாற்றுத்திறனாளிகள் மாவட்ட திட்ட பணிகள் உரிமைகள் அலுவலர் பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் விக்னேஸ்வரன் பங்கேற்றனர். முகாமில், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட தாலுகா பகுதிகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை