மேலும் செய்திகள்
பூதாமூரில் மருத்துவ முகாம்
22-Nov-2024
விருத்தாசலம்: கம்மாபுரம் அடுத்த ஊ.மங்கலம் கிராமத்தில் பருவகால காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.கம்மாபுரம் அடுத்த அரசகுழி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ஊ.மங்கலம் கிராமத்தில் நடந்த முகாமிற்கு, வட்டார மருத்துவ அலுவலர் அருண்ராஜ் தலைமை தாங்கினார். மருத்துவ அலுவலர் ஜீவா முன்னிலை வகித்தார். நடமாடும் மருத்துவ அலுவலர் சுகன்யா தலைமையிலான குழுவினர் குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் காய்ச்சல் உள்ளதா என பரிசோதனை செய்து, மருத்துவ ஆலோசனை வழங்கினர்.முன்னதாக, சுகாதார ஆய்வாளர்கள் ராஜா, கிரிநாத், அர்னால்டு, ஜான்சன் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று டெங்கு காய்ச்சல் தடுப்பு களப்பணியில் ஈடுபட்டனர்.அதில், தேங்கிய மழைநீர், பிளாஸ்டிக் டிரம், தேங்காய் ஓடுகள், கல் உரல் ஆகியவற்றில் கொசுப்புழுக்கள் உற்பத்தி குறித்து பரிசோதனை செய்து, மருந்து தெளிக்கப்பட்டது.
22-Nov-2024