மேலும் செய்திகள்
மலையாண்டவர் கோவிலில் சித்தருக்கு அமாவாசை பூஜை
23-Aug-2025
மேகபாலீஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை
15-Sep-2025
கடலுார்: கடலுார் பாடலீஸ்வர் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி நேற்று கலச பூஜை, ஹோமம் நடந்தது. கால பைரவருக்கு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. ஹோமத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட கலசங்கள் ஆலய உலாவாக வந்து, கால பைரவருக்கு கலச அபிஷேகம் நடந்தது. கால பைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அறநிலையத் துறை உதவி ஆணையர் சந்திரன், ஜி.ஆர்.கே., எஸ்டேட் நிர்வாக இயக்குனர் துரைராஜ், கோமதி துரைராஜ், உமாசங்கர், செயல் அலுவலர் சுரேஷ் உட்பட பலர் சுவாமி தரிசனம் செய்தனர். பூஜைகளை நாகராஜ் குருக்கள் செய்தார்.
23-Aug-2025
15-Sep-2025