மேலும் செய்திகள்
மலையாண்டவர் கோவில் சித்தருக்கு சிறப்பு பூஜை
14-Mar-2025
நடுவீரப்பட்டு : சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது.சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் உள்ள பாலசித்தர் குழந்தை சுவாமி சித்தருக்கு பங்குனி மாத அமாவாசையொட்டி நேற்று காலை 10:00 மணிக்கு சிறப்பு ேஹாம பூஜைகள் நடந்தது. 12:30 மணிக்கு மகா பூர்ணாகுதி நடந்து, யாகத்தில் வைக்கப்பட்ட கலசங்கள் ஆலய உலாவாக வந்து குழந்தை சுவாமி சித்தருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மதியம்1:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, பக்தர்களுக்கு அமுது படைத்தல் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேப் போன்று, நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் உள்ள சித்தர் பச்சகேந்திர சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
14-Mar-2025