உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  சிறப்பு வாக்காளர் முகாம்

 சிறப்பு வாக்காளர் முகாம்

நெய்வேலி: நெய்வேலி டவுன்ஷிப் வட்டம்-2 ல் உள்ள சினேகா பள்ளியில் நடைபெற்ற சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் புதிய வாக்காளர்கள் சேர்க்கை முகாமை, சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., நேரில் பார்வையிட்டார். முகாமில் 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டதோடு, விடுபட்ட வாக்காளர்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டன. மேலும், வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் தேவைப்படும் நபர்களும் பயனடைந்தனர். இந்நிகழ்வில் நெய்வேலி தொகுதி பார்வையாளர் துரைசாமி, நெய்வேலி நகர தி.மு.க., செயலாளர் குருநாதன், அவைத்தலைவர் நன்மாறன்பாண்டியன், மாவட்ட பிரதிநிதி ரவிச்சந்திரன், பொருளாளர் மதியழகன், அப்துல்காதர்பாஷா, கருப்பன், அருள்மணி உள்ளிட்ட தி.மு.க., நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ