உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அம்மனுக்கு சிறப்பு வழிபாடு

அம்மனுக்கு சிறப்பு வழிபாடு

புவனகிரி: மேல்புவனகிரி அங்காளம்மன் கோவிலில் அம்மன் நெய்குளத்தில் அருள்பாலித்தார். மேல்புவனகிரி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், ஹிந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில் விஜயதசமி அன்று சர்க்கரை பொங்கலால் குளம் அமைக்கப்பட்டு, அதில் முழுவதும் நெய் நிரப்பியதில், மூலவர் அம்மனின் திருவுருவம் காட்சியளித்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக அம்மனுக்கு பல்வேறு நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை