மேலும் செய்திகள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கல்
10-Nov-2024
பெண்ணாடம்: இறையூர் அருணா உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு இறுதி விளையாட்டு போட்டிகள் நடந்தது.பள்ளி செயலர் ஞானபிரகாசம் தலைமை தாங்கினார். பொருளாளர் திருஞானசம்பந்தம், பள்ளி தலைவர் ஞானகணேஷ், உதவி தலைவர் சிவசங்கர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் கோபி வரவேற்றார். பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் பங்கேற்று, விளையாட்டு போட்டிகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் செம்பையன், உதவி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.இதில், சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் ஆகிய பெயர்களில் மாணவர்களை 4 குழுக்களாக பிரித்து 100 மற்றும் 400 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், புட்பால், வாலிபால், கூடைபந்து, கபடி உட்பட பல்வேறு போட்டிகள் நடந்தது. போட்டிகளை உடற்கல்வி ஆசிரியர்கள் அனிதா, தினேஷ், அருள்முருகன் நடத்தினர். உடற்கல்வி இயக்குனர் ராஜா நன்றி கூறினார்.
10-Nov-2024