உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முதல்வர் விருதுக்கு விண்ணப்பிக்க விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு

முதல்வர் விருதுக்கு விண்ணப்பிக்க விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் தகுதியான விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் முதல்வர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்கள், பயிற்றுனர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர்கள், நடத்துனர்கள், நிர்வாகிகள், நடுவர்களுக்கு முதல்வர் விருது வழங்கி கவுரவிக்கப்படுகின்றனர்.அதன்படி, 2024-25 மற்றும் 2025-26 ஆகிய 2 ஆண்டுகளுக்கு விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்கள் முதல்வர் விருதுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழக அரசின் முதல்வர் விருது தங்கப் பதக்கத்துடன் ரூ.10,000 ரொக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.தகுதியான விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாடடுத் துறை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்க, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்(http://www.sdat.tn.gov.in) என்ற இணையதளம் மூலம் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பம் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்கள் இணைத்து, விண்ணப்பம் உறையின் மேல் 'முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பம்' என எழுதி அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பம் ஆக., 11ம் மாலை 6 மணிக்குள் சென்னை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை அலுவலகத்திற்கு சென்றடைய வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை