கொள்முதல் நிலையங்களில் கெடுபிடி நெல் மூட்டைகள் தேக்கம்
சேத்தியாத்தோப்பு:கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அரசு நேரடி கொள்முதல் நிலையம் கடந்த 20 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. சுற்றியுள்ள எறும்பூர், நெல்லிக்கொல்லை, மதுவானைமேடு, துறிஞ்சிக்கொல்லை, ஆணைவாரி, சின்னநற்குணம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்யும் நெல்கொள்முதல் செய்து வருகின்றனர். விநாயகர் சதுார்த்தி, தொடர் விடுமுறை, புது விலை காரணாாக கடந்த 10 நாட்கள் கொள்முதல் செய்யவில்லை. கடந்த வாரம் மீண்டும் துவங்கிய நிலையில் 17 சதவீதம் வரை மட்டுமே ஈரப்பதம் வேண்டும் என கூறி, கொள்முதல் செய்யாததால், விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். தமிழக அரசு கடந்த காலங்களில் குறுவை அறுடை காலங்களில் திடீர் மழை, பணி மூட்டம் உள்ளிட்ட காரணங்களால் 18 முதல் 19 சதவீதம் வரை ஈரப்பதம் இருக்கலாம் என அறிவித்துள்ள நிலையில் அதிகாரிகள் ஈரப்பதம் கெடுபிடி செய்வதாக விவசாயிகள் புலம்புகின்றனர். இதனால், கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளது. அதனால், நெல்லை அதே இடத்தில் உளர்த்தி வருகின்றனர். எனவே, மழையை கருத்தில் கொண்டு, கொள்முதல் நிலையத்தில் ஈரப்பதத்தில் தளர்வு கொடுத்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிக ள் கோரிக்கை வைத்தள்ளனர்.