உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

கிள்ளை; சிதம்பரம் வண்டிகேட்டில் 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு திட்ட முகாம் நடந்தது. தாசில்தார் கீதா தலைமை தாங்கினார். மேல்புவனகிரி பி.டி.ஓ., சரவணன், பாலாமணி முன்னிலை வகித்தனர். பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் டாக்டர் மனோகர் குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி, வைத்தார். முகாமில், 13க்கும் மேற்பட்ட துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர். முகாமில், சுகாதார ஆய்வாளர் தனசேகரன், ஒன்றிய இளைஞரணி செயலாளர்கள் நடராஜன், செந்தில்ராஜா, அமைப்புசாரா அணி மாவட்ட நிர்வாகி சுப்பு வெங்கடேசன், நிர்வாகிகள் அரவிந்தன், மணிமாறன், முன்னாள் ஊராட்சித் தலைவர் சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி