உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்..

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்..

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. முகாமிற்கு பேரூராட்சி சேர்மன் செல்வி ஆனந்தன் தலைமை தாங்கினார். தாசில்தார் இளஞ்சூரியன், வட்டார மருத்துவ அலுவலர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். ஆத்மா திட்டக்குழு தலைவர் தங்க ஆனந்தன் முகாமை துவக்கி வைத்தார். முகாமில், பேரூராட்சிக்குட்பட்ட 8 முதல் 15 வார்டு பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் வழங்கினர். தொடர்ந்து சுகாதாரத்துறை சார்பில் கர்ப்பிணிகளுக்கு நலத்திட்ட உதவி, பேரூராட்சி சார்பில் இறப்பு மற்றும் பெயர் மாற்று சான்றிதழ் வழங்கப்பட்டது. வருவாய்த் துறை, மின் துறை உள்ளிட்ட அனைத்து அரசு துறை அலுவலர்கள் துணைத் தலைவர் முத்தமிழரசி பார்த்திபன், கல்விக்குழு உறுப்பினர் செல்வகுமார், முத்துராமலிங்கம், பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். செயல் அலுவலர் ரஞ்சித் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ