உங்களுடன் ஸ்டாலின்œ முகாம் குறிஞ்சிப்பாடியில் 1738 மனுக்கள் அளிப்பு
குறிஞ்சிப்பாடி:குறிஞ்சிப்பாடியில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் ஏராளமானோர் பயனடைந்தனர் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி, 1 முதல், 8 மற்றும், 10 ஆகிய வார்டுகளில் வசிப்போருக்கான, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் பார்வதி திருமண மண்டபத்தில் நடந்தது. ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். குறிஞ்சிப்பாடி நகர செயலாளர் ஜெய்சங்கர், பேரூராட்சி தலைவர் கோகிலா குமார், துணை தலைவர் ராமர், வடலுார் நகரத் தலைவர் சிவக்குமார், செயலாளர் தமிழ்ச்செல்வன், துணை செயலாளர் விடுதலை சேகர், மாவட்ட பிரதிநிதி குமார், ஒன்றிய பிரதிநிதிகள் வெற்றி, ராமு, மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சேகர், அயலக அணி துணை அமைப்பாளர் வீர குணசேகரன், பேரூராட்சி உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், பேரூராட்சி அதிகாரிகள் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். முகாமில் மகளிர் உரிமை தொகை - 590 மருத்துவத்துறையில் - 410, பயனாளிகள் நல வாரியம் - 67, பட்டா கோருதல் - 240, முதியோர் மற்றும் விதவை உதவி தொகை - 60 என மொத்தம், 1738 மனுக்கள் பெறப்பட்டன.