உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பண்ருட்டி நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

பண்ருட்டி நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

பண்ருட்டி: பண்ருட்டி நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை நகராட்சி சேர்மன் துவக்கி வைத்தார். பண்ருட்டி நகராட்சி 26,27 வார்டுகளில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. நகராட்சி சேர்மன் ராஜேந்திரன் தலைமை தாங்கி துவக்கி வைத்து, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டசத்து கிட் வழங்கினார். நகராட்சி உதவி பொறியாளர் கார்த்திகேயன், மேலாளர் குமார், முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் கதிராமன், நகர அவை தலைவர் ராஜா, நகர பொருளாளர் ராமலிங்கம், நகர துணைச் செயலாளர் கவுரி அன்பழகன், கவுன்சிலர்கள் சண்முகவள்ளி பழனி, கிருஷ்ணராஜ், லாவண்யா, முத்துவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி