உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சி.முட்லூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

சி.முட்லூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

கிள்ளை: சிதம்பரம் அடுத்த சி.முட்லூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடந்தது. சிதம்பரம் அடுத்த சி.முட்லூரில் நேற்று 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு திட்ட முகாம் நடந்தது. பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் மனோகர் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., சரவணன் முன்னிலை வகித்தார். உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமை தி.மு.க., மாவட்ட பொருளாளர் கதிரவன் துவக்கி வைத்து, துாய்மைப் பணியாளர்களுக்கு வேட்டி, சேலை வழங்கினார். முகாமில், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அப்பு சத்தியநாராயணன், முன்னாள் சேர்மன் கருணாநிதி, ஒன்றிய துணைச் செயலாளர்கள் சதா இளவரசு, மாவட்ட அமைப்பு சாரா ஒட்டுநர் அணி துணை செயலாளர் சுப்பு வெங்கடேசன், ஆதிதிராவிடர் நலக்குழு அணி அமைப்பாளர் சிவலோகம், நிர்வாகிகள் அரவிந்த், நடராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை