உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உயர்வுக்குப் படி வழிகாட்டி நிகழ்ச்சி

உயர்வுக்குப் படி வழிகாட்டி நிகழ்ச்சி

விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த 'நான் முதல்வன் - உயர்வுக்கு படி' வழிகாட்டி நடந்தது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, சி.இ.ஓ., எல்லப்பன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் வினோத்குமார் வரவேற்றார். உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்து ஆர்.டி.ஓ., விஷ்ணுபிரியா பேசினார். 'உங்கள் வாழ்க்கை பாதையை எவ்வாறு தேர்வு செய்வது' என மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி மைய முதுநிலை விரிவுரையாளர் ராஜேஷ்குமார் பேசினார். வங்கிக் கடன்கள் மற்றும் உதவித்தொகை குறித்து கடலுார் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அசோக்ராஜா விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அரசின் திட்டங்கள் மற்றும் உதவிகள் குறித்து மாவட்ட சமூக நல அலுவலர் சித்ரா, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் லதா பேசினர். முகாமில், விருத்தாசலம், கம்மாபுரம், மங்களூர், நல்லுார், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியங்கள் அடங்கிய கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 275 மாணவர்கள் பங்கேற்றனர். மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குனர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை