உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவி தற்கொலை சக மாணவி சிக்கினார்

மாணவி தற்கொலை சக மாணவி சிக்கினார்

நெல்லிக்குப்பம்:கல்லுாரி மாணவி தற்கொலை வழக்கில், அவரை தற்கொலைக்கு துாண்டியதாக, சக மாணவி கைது செய்யப்பட்டார். கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 18 வயது மாணவி, தனியார் மகளிர் கல்லுாரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவரும், அதே கல்லுாரியில் பயிலும் 20 வயது மாணவியும் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதையறிந்து, 18 வயது மாணவியின் பெற்றோர் கண்டித்ததால், 20 வயது மாணவியுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார். இதில், ஆத்திரமடைந்த அந்த மாணவி, இருவரும் நெருக்கமாக இருந்தபோது எடுத்துக்கொண்ட படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியதால், 18 வயது மாணவி தன் வீட்டில் நேற்று முன்தினம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உறவினர்கள், தற்கொலைக்கு துாண்டிய மாணவியை கைது செய்ய வலியுறுத்தி, நேற்று காலை நெல்லிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். இதையடுத்து, நேற்று மாலை, 20 வயது மாணவியை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ