மேலும் செய்திகள்
பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி தேவை
21-Apr-2025
மந்தாரக்குப்பம் :மந்தாரக்குப்பம் அடுத்த பெரியாக்குறிச்சி பக்தா நகரைச் சேர்ந்தவர் பட்ராஜ் மகன் கமலேஷ்,17; நெய்வேலி தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்துவருகிறார்.இவர் தனது சக மாணவர்கள் 3 பேருடன் கூனங்குறிச்சி சாம்பல் ஏரியில் நேற்று மதியம் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, நீரில் மூழ்கிய கமலேஷக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் மீட்டு என்.எல்.சி., மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர் பரிசோதனை செய்ததில் கமலேஷ் ஏற்கனவே இறந்தது தெரிந்தது. இதுகுறித்து ஊ.மங்கலம் போலீசார் விசாரித்துவருகின்றனர்.
21-Apr-2025