மாணவர்கள் கூட்டமைப்பு துவக்க விழா
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தில், மாணவர்கள் கூட்ட மைப்பு துவக்க விழா நடந்தது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கட்டடவியல் துறையில் நடந்த விழாவிற்கு, துறை தலைவர் மணிக்குமாரி தலைமை தாங்கினார். பேராசிரியர்கள் லதா, ஷீலா முன்னிலை வகித்தனர். ராஜேஷ் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினர் கட்டடவியல் துறை முன்னாள் தலைவர் கனகசபை, மாணவர்கள் கூட்டமைப்பை துவக்கி வைத்து பேசினார். பேராசிரியர் திருஞானசம்பந்தம் பேசினார். கூட்டமைப்பு செயலாளர் ராமலெட்சுமி நன்றி கூறினார்.