உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவி மாயம் போலீசில் புகார்

மாணவி மாயம் போலீசில் புகார்

பண்ருட்டி, : பண்ருட்டி அருகே பள்ளிக்கு சென்ற மகள் மாயமானது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.பண்ருட்டி அடுத்த முத்துநாராயணபுரம் அய்யனார் நகர் சேர்ந்தவர் சுந்தர். இவரது மகள் திவ்யா,16; பாலுார் அரசு அரசு பள்ளியில் பிளஸ்1 படித்துவந்தார். நேற்று முன்தினம் காலை 8:30 மணிக்கு மாணவி திவ்யா வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்றார். மாலை வீடு திரும்பவில்லை.இதுகுறித்து பண்ருட்டி போலீசில் சுந்தர கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி