மாணவர்கள் அறிமுக கூட்டம்
திட்டக்குடி: திட்டக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 2025-26ம் கல்வியாண்டிற்கான முதலாமாண்டு மாணவர்களுக்கு அறிமுகப் பயிற்சி திட்ட கூட்டம் நடந்தது. கல்லுாரி முதல்வர் மணிகண்டன் தலைமை தாங்கினார். இதில், மனித உரிமைகள், மனித வளம், இன்றைய வாழ்க்கை உளவியல், தன்னம்பிக்கை கதைகள், உயர் கல்வி வாய்ப்புகள், மத்திய, மாநில அரசு வேலை வாய்ப்புகள், தனி மனித ஒழுக்கம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அனைத்து துறை தலைவர்கள், விரிவுரையாளர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர். விரிவுரையாளர் வீரபாண்டியன் நன்றி கூறினார்.