உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அண்ணாமலை பல்கலையில் கோடை கால பயிற்சி

அண்ணாமலை பல்கலையில் கோடை கால பயிற்சி

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வித்துறை வளாகத்தில் உள்ள தடகள மைதானத்தில், சிறுவர்களுக்கான கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.சிதம்பரம் தில்லை காளி அத்லெட்டிக்ஸ் கிளப் சார்பில், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வித்துறை வளாகத்தில் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நடந்து வருகிறது. சிதம்பரம் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றுள்ளனர். இதில் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உட்பட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. பல்கலைக்கழக உடற்கல்வி துறை இணை பேராசிரியரும், வேர்ல்ட் அத்லெடிக்ஸ் லெவல் 1 பயிற்சியாளருமான காளிமுத்து தலைமையில் பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. இதில் 50 க்கும் மேற்பட் மாணவ, மாணவியர்கள் பங்கேற்று பயிற்சி பெறுகின்றனர். இணை பயிற்சியாளர்கள் மனோஜ், சரவணன் ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர்,.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ