உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போக்குவரத்து போலீசாருக்கு தெர்மாகோல் தொப்பி வழங்கல்

போக்குவரத்து போலீசாருக்கு தெர்மாகோல் தொப்பி வழங்கல்

கடலுார்: கடலுாரில் கோடை காலத்தையொட்டி போக்குவரத்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தெர்மாகோல் தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கப்பட்டது.கோடை துவங்கிவிட்ட நிலையில், கடலுார் போக்குவரத்து போலீசாருக்கு மதியம் மற்றும் மாலை நேரங்களில் பழச்சாறு வழங்கும் நிகழ்ச்சி மஞ்சக்குப்பம் முதல் பாயிண்ட் சிக்னல் அருகே நேற்று நடந்தது. எஸ்.பி., ராஜாராம் தலைமை தாங்கி வழங்கினார். தொடர்ந்து, போக்குவரத்து பணி போலீசாருக்கு வெயில் தாக்கத்தை தடுக்கும் வகையில் தெர்மாகோல் தொப்பி, சன் கூலிங் கிளாஸ் கண்ணாடி வழங்கினார். நிகழ்ச்சியில் டி.எஸ்.பி., பிரபு, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், எஸ்.ஐ.,க்கள் மகாலிங்கம், ராமச்சந்திரன், திருமாவளவன் மற்றும் போலீசார் பங்கேற்றனர். இது போன்று பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம் நகர போக்குவரத்து போலீசாருக்கும் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி