மூன்று சக்கர சைக்கிள் வழங்கல்
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த கோ.கொத்தனுார் கிராமத்தை சேர்ந்தவர் ரமணா, 41, மாற்றுதினாளி. இவருக்கு, துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, தி.மு.க., மாநில இலக்கிய அணி துணை செயலர் கலைச்செல்வன், ரூ.12 ஆயிரம் மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள் வழங்கினார். அப்போது, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ரகுநாதன், கிளை செயலர் சின்னசாமி, வி.ஏ.ஓ.., ஓய்வு ரங்கசாமி, வி.சி., கட்சி நிர்வாகி தென்றல், சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.