மேலும் செய்திகள்
ஆடிப்பூர ஊஞ்சல் உற்சவம்
29-Jul-2025
புதுச்சத்திரம் : பூவாலை அங்காளம்மன் கோவிலில், ஊஞ்சல் உற்சவம் நடந்தது. புதுச்சத்திரம் அடுத்த பூவாலை அங்காளம்மன் கோவிலில், மாதந்தோறும் அமாவாசை தினத்தில் ஊஞ்சல் உற்சவம் நடப்பது வழக்கம். இம்மாத ஊஞ்சல் உற்சவத்தையொட்டி நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு, ஊஞ்சலில் வைத்து தாலாட்டுப்பாடி, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். இதேப் போன்று, சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலிலும் ஊஞ்சல் உற்சவம் நடந்தது,
29-Jul-2025