உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ஊஞ்சல் உற்சவம்

 ஊஞ்சல் உற்சவம்

புதுச்சத்திரம்: பாலமுருகன் கோவில், ஊஞ்சல் உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். புதுச்சத்திரம் அடுத்த பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில், கார்த்திகையை முன்னிட்டு, ஊஞ்சல் உற்சவம் நடப்பது வழக்கம். இந்நிலையில், இம்மாத ஊஞ்சல் உற்சவம், நேற்று முன்தினம் இரவு நடந்தது. அன்றைய தினம் மாலை 6:00 மணிக்கு, பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. தொடர்ந்து இரவு 9:00 மணிக்கு, சுவாமி சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு, தாலாட்டுப்பாடி, ஊஞ்சல் உற்சவம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ