உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போதை  எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு  

போதை  எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு  

விருத்தாசலம் : இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 44வது அமைப்பு தினத்தை முன்னிட்டு, விருத்தாசலம் பாலக்கரையில் போதை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, விருத்தாசலம் ஒன்றிய செயலர் பரமசிவம் தலைமை தாங்கினார். மாநில இணை செயலாளர் செல்வராஜ் அமைப்பு கொடியை ஏற்றி வைத்தார். இதில், முன்னாள் மாவட்ட தலைவர்கள் குமர குரு, கலைச்செல்வன், மாவட்ட தலைவர் சின்னத்தம்பி, ஒன்றிய தலைவர் ரமேஷ், ஒன்றிய பொருளாளர் வேல்முருகன், ஒன்றிய குழு நிர்வாகிகள் பெரியசாமி, நெல்சன், செந்தில், சேகர், இதயத்துல்லா, கவிதா, அருள்தாஸ், வீரமணி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் போதைக்கு எதிராக உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை