மேலும் செய்திகள்
தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
25-Apr-2025
கடலுார் : கடலுார் மாவட்ட தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் பொதுக்குழுக் கூட்டம் திருப்பாதிரிப்புலியூரில் நடந்தது.மாவட்டத் தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். செயலாளர் கலைமணி வரவேற்றார். . பொருளாளர் சந்தானராஜ் வரவு செலவு கணக்கு சமர்ப்பித்தார். சிறப்பு விருந்தினர் சென்னை தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் சீதாராமன், துணைத் தலைவர் விஸ்வநாதன், பொதுச் செயலாளர் வின்சென்ட் டிபால் பேசினர்.கூட்டத்தில், நிர்வாகிகள் வேணுகோபால், ஸ்டாலின், மணி, ராமலிங்கம், கோவிந்தசாமி உட்பட பலர் பங்கேற்றனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மருத்துவப்படி மாதம் ரூ.1000 உயர்த்தி வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை முழுமையாக நீக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.பொருளாளர் சந்தானராஜ் நன்றி கூறினார்.
25-Apr-2025