மேலும் செய்திகள்
செம்மண் கடத்தல் இருவர் கைது
21-Aug-2025
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர். ஆலடி சப் இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி தலைமையிலான போலீசார் நேற்று குருவன்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆர்.சி.முத்தனங்குப்பம் கிராமத்தை சேர்ந்த சாலமன், 65; குருவன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த முத்து மனைவி பூங்கோதை, 56, ஆகியோர் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து, ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து, சாலமன், பூங்கோதை ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த, குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
21-Aug-2025