உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தவ அமுதம் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

தவ அமுதம் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர். ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 151 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலமாக இப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளது. மாணவர் கோகுல் குமார் 500க்கு 496 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம், மாணவிகள் கவிப்பிரியா, வேதவர்ஷினி, பார்கவி ஆகியோர் 495 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், தர்ஷினி, மதுமித்ரா, ஜெஸ்வின் சாய், ஜோஸ்வா ஜெர்சன், விஷ்ணுதாசன் ஆகியோர் 494 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர். 32 பேர் கணித பாடத்திலும், 37 பேர் அறிவியல் பாடத்திலும், 41 பேர் சமூக அறிவியல் பாடத்திலும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர். சாதனை மாணவர்களை பள்ளி தாளாளர் செங்கோல், முதல்வர் புனிதவள்ளி, செயல் இயக்குனர் சாலை கனகதாரன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ