உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெண் குளியலறையில் கேமரா; வாலிபர் தற்கொலை முயற்சி

பெண் குளியலறையில் கேமரா; வாலிபர் தற்கொலை முயற்சி

கடலுார் : இளம்பெண் வீட்டின் குளியலறையில் மொபைல் போன் கேமரா பொருத்திய வாலிபர் போலீஸ் விசாரணைக்கு பயந்து ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு நிலவியது. கடலுார் பகுதியை சேர்ந்த 23 வயது பெண் நேற்று காலை தனது வீட்டில் குளிக்க சென்றார். அப்போது, குளியலறை ஜன்னலில் மொபைல் போன் கேமரா ஆன் செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பெண்ணின் தரப்பினர் அளித்த புகாரின் பேரில், முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மொபைல் போனை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தினர். அதில், 30 வயது வாலிபருக்கு சொந்தமான மொபைல் போன் எனத் தெரிந்தது.அவரிடம் விசாரணை நடத்த போலீசார் வீட்டிற்கு சென்றனர். இதையறிந்த வாலிபர், வீட்டில் ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடன், அவரை மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.இச்சம்பவம் கடலுாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ