உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தற்காலிக நீதிமன்ற இடம் முதன்மை நீதிபதி ஆய்வு

தற்காலிக நீதிமன்ற இடம் முதன்மை நீதிபதி ஆய்வு

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தில் தற்காலிகமாக நீதிமன்றம் அமைய உள்ள இடத்தை முதன்மை மாவட்ட நீதிபதி ஆய்வு செய்தார். ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி அலுவலக வளாக சமுதாய நலக்கூடத்தில் தற்காலிகமாக புதிய குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் அமைய உள்ளது. நீதிமன்றம் அமைய உள்ள கட்டடத்தை கடலுார் முதன்மை மாவட்ட நீதிபதி சுபத்திரா தேவி ஆய்வு செய்தார். தொடர்ந்து பேரூராட்சி மன்ற வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தார். மேலும் புதிய நீதிமன்ற கட்டடம் கட்டுவதற்கு தாலுகா அலுவலகம் அருகே உள்ள அரசு புறம்போக்கு இடத்தையும் ஆய்வு செய்தார். மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாய மாவட்ட நீதிபதி பிரகாஷ், குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அன்பழகன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கவிதா, சேர்மன் செல்வி ஆனந்தன், செயல் அலுவலர் ரஞ்சித், துணை தாசில்தார் சிவகண்டன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !