உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கலெக்டர் அலுவலகம் எதிரில் தடுப்பணை நிரம்பியது

கலெக்டர் அலுவலகம் எதிரில் தடுப்பணை நிரம்பியது

கடலுார்: மழையால், கடலுார் கலெக்டர் அலுவலகம் எதிரில் தென்பெண்ணையாற்றில், கொம்மந்தான்மேடு தடுப்பணை நிரம்பி தண்ணீர் வழிந்தோடியது.வடகிழக்கு பருவமழை துவங்கியதையொட்டி, கடலுார் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்தது. கடலுார் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பெய்த கன மழையால், ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த நீர்நிலைகள் நிரம்பி, தென்பெண்ணை ஆற்றில் மழைநீர் கலந்து வருகிறது.கடலுார் கலெக்டர் அலுவலகம் எதிரில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள கொம்மந்தான்மேடு தடுப்பணை நிரம்பி, தரைப்பாலத்தின் மேல் தண்ணீர் ஓடியது. வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாலத்தில் தண்ணீர் செல்வதையும் பொருட்படுத்தாமல், ஆபத்தான முறையில் வாகனங்களில் கடந்து செல்கின்றனர்.எனவே, கொம்மந்தான்மேடு தரைப்பாலத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஆபத்தான முறையில் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ