உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கலையரங்கம் கட்டும் பணி பூமி பூஜையுடன் துவக்கம்

கலையரங்கம் கட்டும் பணி பூமி பூஜையுடன் துவக்கம்

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த எம்.பட்டி ஊராட்சியில், கலையரங்கம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு, பி.டி.ஓ., சங்கர் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெகப்பிரியா வசந்தகுமார், தி.மு.க., ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி, காங்., வட்டார தலைவர் ராவணன், முன்னாள் இளைஞர் காங்., தொகுதி தலைவர் செந்தில், வீரபாண்டியன் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், 7 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கலையரங்கம் கட்டும் பணியை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். முன்னாள் ஊராட்சித் தலைவர் காட்டுப்பரூர் வெங்கடேசன், பொறியாளர் ஜெகதீஸ்வரன் உட்பட தி.மு.க., மற்றும் காங்., நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ