தினமலர் கோலப்போட்டி: பரிசு வென்ற மங்கையர் மகிழ்ச்சி
முதல் பரிசு
'தினமலர்' நாளிதழை தினசரி படித்து அன்றாட நிகழ்வுகளை தெரிந்து கொள்கிறேன். புள்ளி கோலம் போடுவதில் ஞாபக சக்தி அதிகரிக்கும். புள்ளி கோலம் போடுவதில் இன்றைய பெண்களுக்கு ஆர்வம் குறைந்து வரும் நிலையில் தினமலர் நாளிதழ் கோலப்போட்டி மூலம் ஆர்வத்தை ஏற்படுத்தியது மகிழ்ச்சி. தினமலர் நாளிதழ் சேவை தொடர வேண்டும்.இந்திராணி, வடலுார். இரண்டாம் பரிசு
கடலுாரில் கடந்தாண்டு நடந்த கோலப் போட்டியில் பங்கேற்றேன். பரிசு கிடைக்கவில்லை என்றாலும், ஆர்வம் காரணமாக இந்தாண்டு ஏற்பாடு செய்த கோலப் போட்டியில் பங்கேற்று வெற்றியும் பெற்றேன். இரண்டாம் பரிசு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. வாய்ப்பை ஏற்படுத்திய தினமலர் நாளிதழுக்கு நன்றி.சுதா, பண்ருட்டி. மூன்றாம் பரிசு
தினமலர் வாசகரான நான், புதுச்சேரியில் கோலப்போட்டி நடக்கும் போதெல்லம் எப்போது கடலுாரில் நடக்கும் என ஆவலுடன் எதிர்பார்ப்பேன். அந்த வகையில், கடந்த ஆண்டு கடலுாரில் கோலப்போட்டி நடத்தியது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தாண்டு சிக்கு கோலத்தில் மூன்றாம் பரிசு கிடைத்தது மகிழ்ச்சி, தொடர்ந்து போட்டியில் பங்கேற் ஆர்வம் உள்ளது.ஓம்சக்தி, கோண்டூர்.