மேலும் செய்திகள்
விஷம் குடித்த முதியவர் சாவு
30-Oct-2024
சின்னசேலம் : காட்டனந்தல் கிராமத்தில் கணவன் இறந்த சோகம் தாங்காமல் மனைவியும் உயிரிழந்தார். சின்னசேலம் அடுத்த காட்டனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் செல்லமுத்து, 75; இவரது மனைவி ஏலக்கண்ணி, 63; இவர்களுக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து 1 மகன் , 3 மகள்கள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த செல்லமுத்து நேற்று முன்தினம் இரவு 12.00 மணியளவில் மூச்சுதிணறல் ஏற்பட்டு இறந்தார். இதனை தொடர்ந்து உறவினர்கள் இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்தனர். துக்க நிகழ்வுக்கு வந்தவர்களுடன் சேர்ந்து தொடர்ந்து அழுது புலம்பி ஏலக்கண்ணி, அதிகாலை 1 மணியளவில் மயங்கி விழுந்து இறந்தார். கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
30-Oct-2024