மேலும் செய்திகள்
நண்பரின் மனைவியை மிரட்டியவர் கைது
14-Jan-2025
கோட்டக்குப்பம் : கோட்டக்குப்பம் அருகே கடலில் குளித்த போது அலையில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.கர்நடாக மாநிலம், பெங்களுரூ ஜே.பி., நகரைச் சேர்ந்தவர் ஹரிஷ் மகன் ஹரிகிருஷ்ணன், 26; பெயிண்டர். இவர், நேற்று முன்தினம் நண்பர்கள் 4 பேருடன், புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தார்.விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த தந்திராயன்குப்பம் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியவர்கள், நேற்று மாலை அப்பகுதி கடலில் குளித்தனர்.அப்போது ராட்சத அலையில், ஹரிகிருஷ்ணன் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். உடன், அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார், ஹரிகிருஷ்ணனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
14-Jan-2025