உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஒரே ஆண்டில் காணாமல் போன பெரியகங்கணாங்குப்பம் தார் சாலை

ஒரே ஆண்டில் காணாமல் போன பெரியகங்கணாங்குப்பம் தார் சாலை

கடலுார் : கடலுார் பெரிய கங்கணாங்குப்பத்தில் அமைக்கப்பட்ட புதிய தார் சாலை, வெள்ளப்பெருக்கிற்கு தாக்கு பிடிக்க முடியாமல், ஒரே ஆண்டில் அலங்கோலமாக மாறிவிட்டது. கடலுார், பெரியகங்கணாங்குப்பம் முதல், மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு வரை சாலையை அகலப்படுத்தி, மழைநீர் வடிகால் மற்றும் சென்டர் மீடியன் அமைக்கும் பணி, நெடுஞ்சாலை துறை சார்பில் 7 கோடி ரூபாய் மதிப்பில் கடந்த டிசம்பர் மாதம் நடந்தது.இந்நிலையில், 'பெஞ்சல்' புயல் காரணமாக பெரிய கங்கணாங்குப்பம் அருகே, கடலுார்- புதுச்சேரி சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பெரிய கங்கணாங்குப்பம்-மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு சாலை பணி முடிந்து ஒரு ஆண்டே ஆகிறது. பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் தாக்குபிடிக்க முடியாமல் இச்சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.இவ்வளவு தொகை செலவு செய்து போடப்பட்ட சாலை, ஒரே ஆண்டில் பெயர்ந்து அரசின் நிதி விணாகி விட்டதே என பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி