வாத்து மேய்த்த சிறுவன் மீட்பு; தொழிலாளர் துறை அதிரடி
புதுச்சத்திரம்; புதுச்சத்திரம் அருகே வாத்து மேய்த்த சிறுவனை தொழிலாளர் நலத்துறையினர் மீட்டனர்.புதுச்சத்திரம் அருகே குழந்தை தொழிலாளரை வைத்து வாத்து மேய்ப்பதாக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. கடலூர் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஞானப்பிரகாசம் தலைமையிலான குழுவினர் நேற்று ஆலப்பாக்கம் அருகே ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆலப்பாக்கம் ரயில்வே கேட் அருகே ஒரு சிறுவன் வாத்து மேய்த்துக் கொண்டிருந்தது தெரிந்தது. இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசில் கடலூர் தொழில்துறை உதவி ஆய்வாளர் விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், புதுச்சேரி அடுத்த குருவிநத்தத்தை சேர்ந்த 9 வயது சிறுவனை மீட்டனர். வாத்து மேய்க்க பயன்படுத்திய சிந்தாமணிகுப்பத்தை சேர்ந்த நாகராஜ் மகன் கருணாகரன்,37; என்பவரை கைது செய்தனர்.