உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் வரும் 17ம் தேதி கிரிக்கெட் வீரர்கள் தேர்வு 

கடலுாரில் வரும் 17ம் தேதி கிரிக்கெட் வீரர்கள் தேர்வு 

கடலுார்; கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் தேர்வு நடக்கிறது.கடலுார் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் 25வயதுக்குட்பட்ட கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் தேர்வு அண்ணா விளையாட்டரங்கில் வரும் 17ம் தேதி காலை 9:00 மணி முதல், 12:00 மணி வரை நடக்கிறது.இதில், பங்கேற்க விரும்புவோர் 1.9.1999 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பிறந்திருக்க வேண்டும். அனுமதி இலவசம். இப்போட்டியில் தேர்வு பெறுவோர் 2025ம் ஆண்டு பிப்., மாதம் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் மாவட்ட கிரி்க்கெட் சங்கம் சார்பில் பங்கேற்பார்கள்.இதே போன்று எஸ்.எஸ்.ராஜன் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் தேர்வு அண்ணா விளையாட்டரங்கில் வரும் 17ம் தேதி பகல் 12:00 மணி முதல், மதியம் 3:00 மணி வரை நடக்கிறது. இதில், பங்கேற்க விரும்புவோர் 1.9.1984 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பிறந்திருக்க வேண்டும்.போட்டியில் தேர்வு பெறுவோர் வரும் டிச., 26ம் தேதி நடக்கும் போட்டியில் பங்கேற்பார்கள். மேலும், விவரங்களுக்கு கூத்தரசன், செயலாளர், மாவட்ட கிரிக்கெட் சங்கம், 98423 09909 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை